எல்லை நிர்ணய அறிக்கை ; கட்சி தலைவர்களுடன் ஆராய்வதற்கு பிரதமர் முடிவு

உள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகையால் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை என்னிடம் ஒப்படைப்பதாயின் கட்சி தலைவர்களை முன்னிலையில் கையளித்தால் சிறப்பாக இருக்கும்.


எனவே பாராளுமன்ற வாரத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை என்னிடம் கையளியுங்கள். அப்போது கட்சி தலைவர்களிடம் அறிக்கை குறித்து ஆராய முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லைநிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆலோசனை விடுத்துள்ளார்.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை கையளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை நிர்ணய ஆணைக்குழு உரிய நேரம் ஒன்றை பெற்றுதருமாறு கோரியிருந்தது. இதற்கு பதில் வழங்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு ஆலோசனை விடுத்துள்ளார். 

Comments