ஞானசாரர் பற்றி, ஜனாதிபதி தெளிவுபடுத்துவாரா..?

நாட்டின் தெருக்­க­ளிலும் ஊடக மாநா­டு­க­ளிலும் மற்றும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் இந்­நாட்டை தாய்­நா­டாகக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் அவ­ம­திப்­புக்­குள்­ளா­னது. பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் குறிப்­பாக பொது­ப­ல­சேனா இந்த செயற்­பா­டு­களைத் திட்­ட­மிட்டு முன்­னெ­டுத்­தது.


முஸ்­லிம்கள் உயி­ரிலும் மேலாகக் கருதும் புனித குர்­ஆனை மாத்­தி­ர­மல்ல அதையும் கடந்து அல்­லாஹ்வின் மீதும் அவர்கள் விமர்­ச­னங்­களை நிறைத்­தார்கள். நிந்­தித்­தார்கள். இந்­நி­லையில் நாட்டில் மீண்டும் ஓர் இன முறு­கலை ஏற்­ப­டுத்தி அசா­தா­ரண நிலையை உரு­வாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இதில் அர­சியல் பின்­பு­லமும் இருக்­கி­றது என உளவுப் பிரி­வினர் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யதன் பின்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்து மதத்­த­லை­வர்­க­ளையும் அனைத்து மதங்­க­ளுக்கும் பொறுப்­பான அமைச்­சர்­க­ளையும் தனது செய­ல­கத்­துக்கு அழைத்து கலந்­து­ரை­யா­டினார். 


நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் உறுதி செய்­வ­தற்­கென்று தனி­யான அமைச்­சொன்று நிறு­வப்­பட்­டது.

அமைச்சுப் பொறுப்பை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்றுக் கொண்டார். இரா­ஜாங்க அமைச்­ச­ராக ஏ.எச்.எம்.பௌசி நிய­மிக்­கப்­பட்டார். இதற்­கான செய­லகம் ஜனா­தி­ப­தியின் அலு­வ­ல­கத்­திலே அமைந்­துள்­ளது.


தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தின் திட்­டப்­ப­ணிகள் என்ன என்­பது இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதா­வது, 'அடிப்­படை உரி­மை­களை மதிக்கும் சட்ட விதிகள், சமத்­துவம் மற்றும் பன்­மைத்­து­வத்­தினைப் பாது­காத்து சகல பிர­ஜை­களும் தமது இனம், சமயம், மொழி, சாதி,வயது, பால், பாலினம், பிறப்­பிடம் மற்றும் அர­சியல் கொள்­கைகள் என்­ப­வற்­றினை வேற்­று­மை­யாகக் கொள்­ளாது கெள­ர­வ­மாக வாழ்­வ­தற்குத் தேவை­யான சமூகம் ஒன்­றினை மேம்­ப­டுத்தல்' என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 


மதத்­த­லை­வர்கள் – ஜனா­தி­பதி சந்­திப்பு
நாட்டில் தொடர்ந்து இனங்­க­ளுக்கும் சம­யங்­க­ளுக்கும் இடையில் முறுகல் நிலை உரு­வா­கிய நிலை­யிலே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மதத்­த­லை­வர்­க­ளையும் அனைத்து மதங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­சர்­க­ளையும் சந்­தித்தார். இந்தச் சந்­திப்பு கடந்த 6 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. 


பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய, ராவணா பலய, சிங்­ஹலே போன்ற கடும் போக்­கு­வாத பௌத்த அமைப்­புகள் சில­வா­ரங்­க­ளுக்கு முன்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கண்­டியில் நடத்­திய ஆர்ப்­பாட்டம், ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா அத் முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொண்ட ஆர்ப்­பாட்டம், கடந்த 3 ஆம் திகதி குறிப்­பிட்ட பௌத்த கடும் போக்கு அமைப்­புகள் மட்­டக்­க­ளப்­புக்கு மேற்­கொள்ள முற்­பட்ட விஜயம், மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய அதி­பதி அம்­பிட்­டிய சுமணரத்ன தேரரின் இனங்­களை வெறுப்­பூட்டும் பேச்­சுக்­களும் செயற்­பா­டு­க­ளுமே ஜனா­தி­ப­தியை உட­ன­டி­யாக செயலில் இறக்­கின எனக்­கூ­றலாம். நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே ஒரு அச்­ச­நிலை உரு­வா­கி­யுள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் அந்தப் பீதியைக் களைவ­தற்­கா­கவே ஜனா­தி­பதி இம்­மு­யற்­சியை மேற்­கொண்­டார்.


ஞான­சார தேரர் ஏன் அழைக்­கப்­பட்டார்?
ஆனால் பிணை நிபந்­த­னை­களை தொடர்ந்து மீறி­வரும் ஞான­சார தேர­ருக்கு சட்டம் ஏன் சலுகை வழங்­கி­யுள்­ளது? ஏன் அவர் கைது செய்­யப்­ப­டு­வது தடுக்­கப்­ப­டு­கி­றது. இந்­நாட்டில் காவி­யு­டைக்கு ஒரு சட்டம் ஏனை­ய­வர்­க­ளுக்கு மற்­றொரு சட்­டமா? என்று பெரும்­பான்­மையோர் விமர்­சித்து வரு­கி­றார்கள்.  சர்­வ­மதத் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஞான­சார தேரர் அழைக்­கப்­பட்­ட­மைக்கு முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து பலத்த கண்­டனம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
ஸ்ரீ.ல.மு.கா.செய­லாளர் ஹசன் அலி 


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­மத தலை­வ­ரு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் அழைக்­கப்­பட்­ட­மைக்கு கடும் எதிர்ப்­பினை முஸ்லிம் சமூகம் சார்பில் வெளி­யிட்­டுள்ளார்.  நீதி­மன்ற உத்­த­ர­வினை பகி­ரங்­க­மாக பலரும் பார்த்­தி­ருக்க கிழித்­தெ­றிந்த ஒருவர் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டாது. நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவும் இது நீதி­மன்­றினை அவ­ம­தித்­த­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.
நீதி­மன்­றினை முன்பு அவ­ம­தித்­த­தற்­காக அவர் நீதி­மன்­றினால் எச்­ச­ரிக்­கப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்­துள்ளார்.  ஞான­சார தேரர் பல வழக்­கு­களின் பிர­தி­வாதி. அவ­ருக்கு ஒரு போதும் அங்­கீ­காரம் அளிக்க முடி­யாது. இவர் கைது செய்­யப்­பட வேண்­டி­யவர். விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த வேண்­டி­யவர். நாட்டில் இடம்­பெற்ற இன­ரீ­தி­யான முறு­கல்­க­ளுக்கு இவரே கார­ண­மா­னவர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்தப் பின்­ன­ணியில் இவர் அழைக்­கப்­பட்டார் என்­பதைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.


தே.ஐ.மு. தலைவர் அசாத்­சாலி
தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சா­லியும் ஞான­சார தேரர் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைக்­கப்­பட்­ட­மைக்கு பலத்த கண்­டனம் தெரி­வித்­துள்ளார். நாட்டில் தற்­போது இனங்கள், மதங்­க­ளுக்­கி­டையில் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னை­களை ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஒன்று கூட்­டிய சர்­வ­மதத் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஞான­சார தேரர் அழைக்­கப்­பட்­டி­ருக்கக் கூடாது.


ஞான­சார தேரரை வைத்­துக்­கொண்டு நல்­லி­ணக்­கத்­தையும், சக­வாழ்­வையும், தேசிய ஒற்­று­மை­யையும் பேசு­வதில் பய­னில்லை. நீதி­மன்­றத்தின் பிணை நிபந்­த­னை­களை மீறி சுதந்­தி­ர­மாக நட­மா­டி­வரும் ஒருவர் அழைக்­கப்­பட்­டமை அவ­ருக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­த­தற்குச் சம­மாகும். இது அநீ­தி­யாகும். சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­ன­தாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.


கைது செய்­யப்­பட்டு சிறையில் வைக்­கப்­ப­ட­வேண்­டிய ஒரு­வ­ருடன் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் பற்றிப் பேச முடியும். இது தவ­றாகும். எவ­ரது ஆலோ­ச­னையின் பேரில் ஞான­சா­ர­தேரர் அழைக்­கப்­பட்டார்? எந்த நோக்­கத்­திற்­காக அழைக்­கப்­பட்டார் என்­பது நாட்­டிற்குத் தெளி­வுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றார்.
ஞான­சா­ர­தேரர் என்ன கூறினார்? 


சர்­வ­மத அமைச்­சர்­களும் சர்வ மதத்­த­லை­வர்­களும் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வந்­த­மர்ந்து சுமார் 10 நிமி­டங்கள் தாம­தித்தே ஞான­சார தேரர் அவ்­வி­டத்தை அடைந்தார். அவ­ருக்கு முன்பே அஸ்­கி­ரிய மாக­நா­யக்க தேரர், மல்­வத்த மகா­நா­யக்க தேரரின் பிர­தி­நிதி, சிங்­கள ராவ­யவின் தலைவர், செய­லாளர் வந்து அமர்ந்­தி­ருந்­தனர்.
-ARA.Fareel--

Comments