Skip to main content
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பயணம் செய்த வாகனம் விபத்து
கிழக்கு மாகாண வீதி காணி மற்றும் மகளிர் விவகாரத்திறன் அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி பயணித்த வாகனம் இன்று (5) காலை விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக திருகோணமலை நகரிலிருந்து முள்ளிப்பொத்தானைப் பிரதேசம் நோக்கி மாகாணக் காணி அமைச்சர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இதன்போது முள்ளிப்பொத்தானை 96ஆம் கட்டை கமநல சேவைகள் நிலையத்துக்கு முன்பாகவுள்ள வளைவில் இவரது வாகனம் திரும்பிக்கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.பொடிமெனிக்கே (வயது 43) என்பவரே காயமடைந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
(ihzana fareed)
Comments
Post a Comment