.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இலங்கை இஸ்லாமிய இலக்கிய மையத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் இந்தியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் இலக்கிய விற்பன்னர்கள் கலந்து கொண்டார்கள்.
இஸ்லாமிய – தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்த பத்து இலக்கிய விற்பன்னர்கள் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றுள்ளது
இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதியமைச்சர் அமீரலி உட்பட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்..
Comments
Post a Comment