நேர்மையானவர்கள் FCIDஐப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை: மைத்ரி

ஆவணங்களில் கையொப்பமிட்டு  FCIDயில் மாட்டிக்கொள்ள முடியாது என கருதும் அதிகாரிகள் அந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியில்லாதவர்கள் எனத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தாம் நேர்மையானவர்களாக இருந்தால் நிதி மோசடி விசாரணைப் பிரிவைப் பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லையெனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, லஞ்ச ஊழல் அற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒததுழைப்பையும் தாம் வேண்டி நிற்பதாகவும் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊழல் ஒழிப்பு தின நிகழ்வில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments