மட்டு விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அட்டகாசம் (video)

மட்டக்களப்பு நகருக்குள் இருக்கும் பல வீதி வழியாக  மக்களை துவேச வார்த்தைகளால் திட்டி ஓடித்திரிந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனம் நேற்றைய(03) மட்டக்களப்பு நகரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பொலிசாரின் உத்தரவை மீறி நகரின் பல வீதி வழியாக தேரர் தனது சகாக்களுடன் வீதி வீதியாக ஓடித்திரிந்துள்ளார்.
மேலும் வீதிகளில் சென்ற தமிழ் மக்களை துவேச வார்த்தைகளால் திட்டி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தது மட்டுமன்றி தேரரின் குழுவினருக்கு அனைத்து பொலிசாரும் பாதுகாப்பு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் விகாராதிபதியின் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நகரில் இனக்கலவரம் மற்றும் மதக்கலவரம் ஏற்படக்கூடிய சூழ் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் அறிந்து குறித்த இடத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வருகைதந்த போதும் அமைதியான முறையில் பொலிசாருடன் கலந்துரையாடியது மட்டுமின்றி சட்டத்தின்படி விகாராதிபதிக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த விகாராதிபதியை பொலிசார் கைது செய்யாமை குறித்து பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பொலிசார் மீது தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Comments