01கிலோ கேரளா கஞ்ஞாவுடன் ஒருவர் கைது,,,

(ihzana fareed)

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சூரங்கல் பகுதியில் நேற்றிரவு (07) கேரளா கஞ்ஞா 01கிலோ 90கிரேமுடன் ஒருவரைக்கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச்சேர்ந்த எம்.றஹ்மத்துல்லாஹ்  எனவும் தெரியவருகின்றது.

பல மாதங்களாக கஞ்ஞா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிண்ணியா பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அவர் நபரொருவருக்கு கஞ்ஞாவை விற்க முற்படும் போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

Comments