கந்தளாயில் காலாவதியான உணவுகளை வைத்திருந்த 08 பேர் மீது நடவடிக்கை

(ihzana fareed)

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பேராறு பிரதேசத்தில் கடைகள்,உணவு சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் நேற்று வியாழக்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது காலாவதியான தானியங்கள்,மற்றும் அசுத்தமான முறையில் வைத்திருந்த ஹோட்டல் உரிமையாளர்கள் எட்டு பேரை இனங்கண்டுள்ளதாக கந்தளாய் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதக அதிகாரி எம்.டபிள்யு.திஸாநாயக்க தெரிவித்தார்.

குறித்த எட்டு பேரையும் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை(20) கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கந்தளாய் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் கடந்த மாதம் பரிசோதனை நடவடிக்கைகளின் போது இருபத்தி நான்கு பேரை இனங்கண்டு அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Comments