மைத்திரியின் ஆட்சிக்கு இன்றுடன் 2 வயது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிரணியினரின் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ஷவை தோற்கடித்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அதற்கமைய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

Comments