2017 வருடம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறந்த வருடமாக அமைய விஷேட துஆ பிரார்த்தனை ..
சர்வதேச புத்தாண்டை முன்னிட்டு சர்வ மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி இன்று அவரது தங்கல்லை கால்டன் இல்லத்தில் விஷேட துஆ பிரார்தனை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஹம்பந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் அல் பாயிஸ் வஸீர் மவ்லானா நசீம் மவ்லானா ஆகிய மவ்ளவிமார்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் போது தங்கல்லையில் புதிதாக கட்டப்படும் பள்ளிவாயல் தொடர்பில் விபரம் கேட்டறிந்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கான உதவிகள் தேவைப்படுமாயின் உதவுமாறு முன்னாள் அமைச்சர் பெசிலுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



Comments
Post a Comment