243 பேரின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்

243 பேரின் பரீட்சைப் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் முறைகேடாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் பெறுபேறுகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திக்குப் பதிலாக வேறு ஒருவரை வைத்து பரீட்சை எழுதுதல், வேறு ஒரு பரீட்சார்த்தியின் விடையை பிரதி பன்னுதல், விடைகளை எழுதி வந்த தாள்களை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மாணவர்களின் பெறுபேறுகளையே இவ்வாறு நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, கஷ்டப் பிரதேசங்களில் பரீட்சை எழுதிய நகர்ப்புற மாணவர்கள்  80 பேரின் பெறுபேறுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments