கிண்ணியாப் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற திருட்டுச் சம்பவம்











(ihzana fareed)

கிண்ணியாப் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்களை நேற்று (31) காலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வீட்டிலிருந்து 75 ஆயிரம் ரூபாய் பணமும் அலைபேசி ஒன்றும் திருட்டுப் போனதாக பொலிஸ் நிலையத்தில் அவ்வீட்டு உரிமையாளர்; 

முறைப்பாடு செய்திருந்தார். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அலைபேசி விற்பனை செய்வதற்காக கிண்ணியாவிலுள்ள அலைபேசி விற்பனை நிலையத்துக்குச் சென்ற இச்சந்தேக நபர்களில் ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு விற்பனை நிலைய உரிமையாளர் தகவல் வழங்கினார். இதன் பின்னர், குறித்த இடத்துக்குச் அச்சந்தேக நபரைக் கைதுசெய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, ஏனைய இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறின

Comments