58 நிபந்தனைகளுடன் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை!

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்;;துள்ள பாரிய 58 அரசியல் தீர்மானங்களுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது உரையாற்றிய கட்சியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இதனை குறிப்பிட்டார்.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.

அதிகாரத்தை பகிர்வை மேற்கொண்டு சமஸ்டி முறையை நடைமுறைப்படுத்துதல், ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களை செயற்படுத்துதல்,

பயங்கரவாத தடைச்சட்;டத்தை நீக்குதல் போன்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments