69வது தேசிய சுதந்திர தினம் இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில்

கிழக்கு மாகாண சபை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 69வது தேசிய சுதந்திர தினம் இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடை பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோரின் தலைமையில் 2017-02-04ம் திகதி காலை 8.00மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்கள்.மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள நலன் விரும்பிகளை வருகை தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments