கிண்ணியாவில் 69 தேசிய சுதந்திர தின விழா
(ihzana fareed)
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் 69 வது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வை இம்முறை வெகு விமர்சையாக நடாத்துவதற்கு கிண்ணியா பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிகழ்வு எதிர் வரும் 04 ஆந் திகதி காலை 9.00. மணிக்கு கிண்ணியா எழிலரங்கு விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முப்படைகளும், மற்றும் சிவில் பாதுகாப்பு படையணிகள், பாடசாலைகள் அதிபர், மற்றும் ஆசிரியர்கள், கிண்ணியா பிரதேச செயலக உத்தகயோகத்தர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிண்ணியா பிரதேச செயலகம் மேற்கொண்டு வருவதாக நிர்வாக உத்தியோகத்தர் நித்திய லட்சுமி ரத்தின வடிவேல் தெரிவித்தார்.
இப் பிரதேச செயலகம் தேசிய சுதந்திர தின விழாவை வழமையாக பிரதேச முன்றலிலேயே நடாத்தி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment