மஹிந்தவுடனான கலந்துரையாடலில் 6 முதலமைச்சர்கள்!

முன்னாள் ஜனாதிபதிக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் இன்று காலை ஆரம்பமான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஆறு முதலமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன இந்த கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருக்கவில்லையென கூறப்படுகின்றது.

அவசியமான தேவையொன்றின் நிமித்தம் தான் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லையென அவர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Comments