கந்தளாயில் 8050 ஏக்கர் திடல் வேளாண்மை செய்கை மழையில்லாததால் பாதிப்பு


fail
திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் திடல் காணிகளில் செய்கை பண்ணப்பட்ட எட்டாயிரத்து ஐம்பது ஏக்கர் வேளாண்மையும் நீர் இன்றியும்,மழையில்லாமலும் அழிவடையும் நிலையிலுள்ளதாக கந்தளாய் விவசாய சங்கத்தின் தலைவர் எஸ்.எம். சம்சுதீன் தெரிவித்தார்.

மாரிகால மழை நீரீனை நம்பி காலகாலம் தொட்டு மேற்கொண்டு வரும் திடல் காணிகளின் நெற்செய்கை இம்முறை பல சிரமங்களையும்,நட்டத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் சரியான முறையில் மழை பெய்யாததால் கந்தளாயில் மட்டும் எட்டாயிரத்து ஐம்பது ஏக்கர் கேள்விக்குறியாகியுள்ளது.

முழு மாவட்டத்தினையும் கணக்கிடும் போது இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வேளாண்மை செய்கை பாதிப்படையுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments