ADSSO ஏற்பாட்டில் பட்டதாரிகளுக்கான கருத்தரங்கு



அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பான ‘அட்சோ’ (ADSSO) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனைத் தொகுதியில் வசிக்கும் வேலைவாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளின் தகவல்களைத் திரட்டும் முகமாக இடம்பெற்ற கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை (28) காலை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

அமைப்பின் தலைவரும் பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரியினால் பட்டதாரிகளுக்கு வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஏனைய தொகுதிகளில் இக்கருத்தரங்கு வெகு விரைவில் நடத்தப்படுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Comments