BBS, சிங்ஹலே எல்லாம் ‘போலிகள்’: தெளிவு பெற்ற அம்பிட்டியே சுமனரத்ன தேரர்! (video)


பௌத்தவாதம், தேசியவாதம் பேசிக்கொண்டு பொது பல சேனா மற்றும் சிங்ஹலே போன்ற அமைப்புகள் போலி வேடம் தரித்திருப்பதாகவும் அவர்களைப் பற்றி இப்போது தாம் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பின் சர்ச்சைக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர்.

எல்லோருமாக சேர்ந்து உருவாக்கிய பிரச்சினைக்கு இப்போது தான் மட்டுமே முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், மற்றவர்கள் வேறு ஏதோ ஒரு திட்டத்திற்காகத் தன்னையும் தனது போராட்டத்தையும் பயன்படுத்தியுள்ளதாகவே தான் உணர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாகத் தாம் போராடி வரும் நிலையில் திடீரென அண்மையில் தேசிய அமைப்புகளாகக் காட்டிக்கொள்ள முயலும் பொது பல சேனா போன்ற அமைப்புகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றியிருக்கிறார்களே தவிர தமக்கும் தமது போராட்டத்திற்கும் ஆதரவளிப்பது அவர்களது நோக்கமில்லையென இப்போது தாம் உணர்ந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான உரை:

Comments