தமிழ் மாணவர்களை தண்டிக்கும் கிழக்கு.பல்கலைக்கழக நிர்வாகம்!




கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அமைதி காக்கும் தமிழ் மாணவர்களுக்கு எதிராக செயல்படுவதாக அங்கிருந்து வரும்  செய்திகள் தெரிவிக்கின்றது.

சிங்கள மாணவர்களுக்கு பயந்து தங்களையும்  தங்களின் பதவிகளையும் பாதுகாத்துக்கொள்வதற்காக மேற்படி நிர்வாகம்  முதலாம் ஆண்டு   தமிழ் மாணவ மாணவியர்கள் விடுதிக்கு வந்த இரவே அவர்களை விடுதியைவிட்டு மறுநாள் காலை வெளியேறுமாறு கட்டளை பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள முடியாமல் அதற்கு பழிவாங்க தமிழ் மாணவ மாணவிகளை பயன்படுத்துவது எந்தவழியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிங்களத்திற்கு  தலைசாய்க்கும் இந்த சுய நலவாத பல்கலைக்கழக உயர் அதிகாரிகளை தமிழ் சமூகம்  தமிழ் துரோகிகள் என்று ஏன் அழைக்கக்கூடாது.

பல்வேறு சிரமங்களுக்கும் பொருளாதார சிக்கலுக்கும் முகம் கொடுத்து தங்களின் உயர் கல்வியை தொடர பல்வேறு கனவுகளுடன் பல்கலைக்கழகத்திற்கு சென்ற மாணவ சமூதாயத்தையும் அவர்களின் பெற்றோர்களையும் வஞ்சிக்க நினைக்கும் கல்விமான்கள் புத்தி ஜீவிகள் என்று குறிப்பிடப்படும் இவர்களை தமிழ் சமூகம் இனி எப்படி அழைக்கவேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments