இறக்காமம் பிரதான வீதியை காபட் வீதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


எமது இலங்கைத் தாயகம் பல குடியிருப்பினர்களை கண்டு கழித்த ஓர் தீவாகும். எனவே ஆரம்பகால குடியேற்ற மக்கள் தங்களது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டதன் பின்னர் பாதைகள் அமைப்பதிலும் மற்றும் இருக்கும் பாதைகளை விரிவு படுத்துவதிலும் தான் அவர்களது முதற் கவனத்தை செலுத்தினார்கள்.

ஏனென்றால் ஓர் கிராமத்தின் வளர்ச்சிக்கும் அதில் உற்பத்தி செய்யப்படும் பொளுட்களை பிற நகரங்களுக்கு கொண்டு செல்வதற்கும் போக்குவரத்து ஊடகமான பாதை மிகவும் செம்மையாக அமைய வேண்டும் அப்போதுதான் அதன் வளர்ச்சிப் போக்கு வீரியமடைந்து மக்கள் பல வழிகளிலும் தங்களது முதலீட்டல்களை பெற்று தன்னிறைவாக வாழ்வார்கள்.

என்றாலும் இப்படிப்பட்ட செய்தியை ஞாபகப்படுத்தியவனாக எனது பூர்வீக கிராமமான அம்பாரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகவும் அழகும் பச்சைச் சூழலையும் தன்னகத்தே வைத்திருக்கும் இறக்காமம் மண் தற்போது சுமந்திருக்கும் சோகக் கதையை உங்களிடம் பரிமாறிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

உண்மையில் இந்த இறக்காமம் மண் பல வருடங்கள் பழமை வாய்ந்த ஓர் விவசாயக் கிராமமாகும்.; இதில் பாடசாலை, வைத்திய சாலை, அஞ்சல் அலுவலகம், பிரதேச சபை, நகர சபை, கமநல சேவை போன்ற சமூகத்திற்குத் தேவையான எல்லாத் துறைகளையும் கொண்டுள்ள கிராமமாகும். இன்னும் இதில் அரச தொழில்களிலும்; சேவை புரியும் பல மக்களும் உள்ளனர்.

எனவே இக் கிராமத்தில்; வெளி ஊர் மக்களும் தங்களது தொழில் நிமிர்த்தம் காரணமாக இறக்காமம் வருவதினால் அவர்களும் இந்த பிரதான பாதையின் அவலத்தினால் பெரிதும் அசௌகரியங்களை எதிர் நோக்குகிறார்கள் மற்றும் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசானகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே இந்த இறக்காமத்தின் பிரதான வீதியை காபட் வீதியாக அமைப்பதில் முஸ்லிம் அரசியல் வாதிகளும், பிரதேச சபையும், நகர சபையும் மற்றும் மாகாண சபையும் கவனம் செலுத்தி மிக விரைவில் இறக்காமம் வீதி காபட் வீதியாக அமைய நல்லாட்சி அரசிடம் கோரிக்கை வைக்குமாறு அன்பாய் வேண்டப்படுகின்றது.

Comments