நுகேகொட கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டாம் மஹிந்தவின் பகிரங்க அறிவிப்பு!
எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ள நுகேகொட கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த, தற்போது அரசாங்கத்துடன் உள்ள அமைச்சர்கள் எவரும் அன்றைய தினம் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தான் ஆலோசனை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போது விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 03 மாதம் வரை அவருக்கு பிணை வழங்குவதில்லை என்று ஒரு அமைச்சர் கூறியிருப்பதாகவும்,
இதன் மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதிமன்றத்தாலா அல்லது அமைச்சர்களாலா என்று தெளிவாகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று 27ம் திகதி நுகேகொட கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்களின் பிள்ளைகளும் சிறை செல்ல வேண்டி ஏற்படும் என்று அமைச்சர் ஒருவர் நேற்று பகிரங்கமாக கூறியிருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் கஷ்டப்படுவது பிரச்சினையில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்பதால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தவர்களை பங்கேற்க வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அனைத்து போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Comments
Post a Comment