வாகன சாரதிகளின் கவனத்திற்கு!



காலி முகத்திடல் பாதை மூடப்படவுள்ளதாக சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகளுக்காக இவ்வாறு வீதி மூடப்படவுள்ளது.

அதற்கமைய, நாளை, நாளை மறுதினம் மற்றும் பெப்ரவரி முதலாம், இரண்டாம் மற்றும் 3 ஆம் ஆகிய திகதிகளில் காலை 7.00 மணி முதல் ஒத்திகை நிறைவடையும் வரை காலி முகத்திடல் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த காலப்பகுதியில் மாற்று பாதைளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை ‘தேசிய ஒற்றுமை’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுதந்திர தின நிகழ்வானது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments