ஓட்டமாவடி: கவனிப்பாரற்று நேரம் காட்ட மறுக்கும் மணிக்கூட்டுக் கோபுரம்

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம், அதன் சுற்று வட்ட பகுதி கவனிப்பார் அற்ற நிலையில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2மில்லியன் ரூபாய் செலவில் ஓட்டமாவடி பிரதேச அழகு படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் பல மாதகாலமாக செயல் இழந்து காணப்படுகிறது.

மணிக்கூட்டு கோபுரமும் அது அமைத்துள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்று தடாகம் டெங்கு நுளம்பு பரவும் விதத்திலும் ஏனைய பகுதிகளில் மிருகங்களின் மண்டை ஓடு ,எலும்புகள் உள்ளிட்ட எச்சங்கள் காணப்படுவதுடன் இவ்விடம் ஓட்டமாவடி பிரதேச சபையின் உரிய பராமலுப்பு இல்லாமையினால் பற்றை காடுகள் வளர்ந்து வருவதுடன் கால் நடைகளின் மேச்சல் தரையாக மாறியுள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments