ராஜபக்சர்களின் பிரஜாவுரிமையை பறிக்க முயற்சி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் அரசியல் பயணத்தை தடுப்பதற்கு அரசாங்கம் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதனை இலக்காகக் கொண்டு அரசாங்கம் குற்றங்களுக்கான விசேட நீதி ஆணைக்குழுவை அமைப்பதற்கு எதிர்பார்க்கிறது எனவே அவ்வாறான நடவடிக்கைகளுக்கு கூட்டு எதிர்க்கட்சி வன்மையான எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆணைக்குழு மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களின் பிரஜாவுரிமையை இல்லாமலாக்கவும் எதிர்ப்பார்க்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீ வஜிர ஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணியை வழங்க முடியாவிட்டால் பொலன்னறுவையில் அதற்கான காணி யை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அக்கருத்து ஆரோக்கியமான ஒன்றல்ல.
எனவே, ஜனாதிபதியை, பிரதமர் அவ்வாறான நெருக்கடியான நிலைக்கு உட்படுத்தியுள்ளார். ஜனாதிபதி எதையாவது மேற்கொள்வதாயின் பிரதமரின் தயவை வேண்டியே நிற்கின்றார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு முன்னாள் பிரதமரின் தயவை வேண்டி நிற்கவில்லை. மேலும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையில் தலையிட முடியாத நிலையும் உள்ளது.
அத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையினால் நாடு பொருளாதார ரீதியில் மிகவும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் உயர் நிலையில் இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பொருளாதாரம் மேலும் இக்கட்டான நிலை க்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது.
எனினும் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமல் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கிறது.
அத்துடன் பிரதமர் வெளிநாடு செல்லும் முன்னர் எவரைக் கைது செய்யவேண்டும்? எவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலான ஏற்பாடுகளை மேற்கொண்டு விட்டே செல்கின்றார்.
முன்னாள் அமைச்சர்களின் வாகனம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களை கைது செய்கின்றனர். இருந்தபோதிலும் பாரியளவான நிதி மோசடியில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment