அனைத்து வாகன சாரதிகளுக்கும் ஓர் அவசர அறிவித்தல்!
வாகனங்களில் சாரதிகளின் இரு மருங்கிலும் உள்ள கண்ணாடிகளை மறைக்கும் வகையில் திரையிடல் மற்றும் கருமைப்படுத்தல் செயற்பாடுகளை முற்றாக நீக்குவதற்கு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து வாகனங்களும் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை சோதனைக்கு உட்படுத்தப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
வாகனங்களில் சாரதி அமரும் ஆசனத்துக்கு இருமருங்கிலும் உள்ள கண்ணாடிகளை மறைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு கடந்த 19 ஆம் திகதி முதல் தடைவிதிக்கப்பட்டது.
இதன்படி இருபக்க கதவுகளின் கண்ணாடிகளுக்கு திரையிடுதல், வர்ணம் பூசுதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த சட்டத்தை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக பெப்ரவரி முதலாம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.

Comments
Post a Comment