விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது அரசு: மஹிந்த

உள்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து வெளிநாட்டு விவசாயிகளுக்கு அரசாங்கம் பணம் அனுப்புவதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

வெளிநாட்டிலிருந்து அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், நடைமுறை அரசுக்கு விவசாயிகள் பற்றி எந்த அக்கறையும் இல்லையென குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் விவசாயியின் மகன் ஆட்சி பீடமேறியுள்ளதாக நாடு கொண்டாடியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

Comments