Skip to main content
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதிய திட்டம்!
எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மின்சார விநியோக தடை பிரச்சினைக்கு தீர்வாக வீதி மின்விளக்குகளை ஒரு மணி நேரம் தாமதித்து ஒளிரச் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பான ஆலோசனை இலங்கை மின்சார சபையினால் சகல நகர சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, நாளந்தம் 5.30க்கு ஒளிரச் செய்யப்படும் வீதி மின் விளக்குகள், எதிர்காலத்தில் 6.30க்கு ஒளிரச் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போது வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சாதாரண மின்குமிழ்களுக்கு பதிலாக எல்.ஈ.டி மின்குமிழ்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments
Post a Comment