திருகோணமலையில் உப உணவு வேலைத்திட்டம்


(ihzana fareed)

 அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் பயிரிடப்பட்ட உணவுப் பயிர்களின் அறுவடை வைபவம் 17.01.2017 நேற்று கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் வளாகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.ஹுசைன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவி செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Comments