லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப நிகழ்வு





(ihzana fareed)

கல்முனை கல்வி வலய லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் 2017ஆம் கல்வியாண்டுக்கான வித்தியாரம்ப நிகழ்வு 11 ஆம் திகதி புதன்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் வழிகாட்டலில் பிரதி அதிபர் ஏ.எம்.ஏ. நிஸார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக சாய்ந்தமருது மழ்ஹரியன் 2000 சமூக சேவை அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாந் தர வகுப்பு மாணவர்கள் பாடசாலையில் இணைந்த புதிய 1ஆம் தர வகுப்பு மாணவர்களை மாலை அணிவித்து, இனிப்புக்கள் வழங்கி வரவேற்கும் நிகழ்வுகளும் 2ஆம் தர மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் எப். முஹம்மட் அஸ்லம் பிரதம உரை நிகழ்த்தினார்.

Comments