ஓய்வு பெற இருந்தவர் மூன்றாம் தவணைக்கு ஆசைப்பட்டதேன்? ரணில் கேள்வி!
தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற எண்ணியிருந்த போதிலும் மைத்ரிபால சிறிசேனவாலேயே தொடர்வதாகவும் அண்மையில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்படியொரு எண்ணம் இருந்தவர் தேர்தலுக்கு வெகு காலத்துக்கு முன்பதாகவே 18ம் சட்டத்திருத்தம் மூலம் மூன்றாவது முறை ஜனாதிபதியாக முயற்சித்ததேன் என கேள்வியெழுப்பியுள்ளார்.
மஹிந்த முறையாக ஓய்வு பெற்றிருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ள பிரதமர், இப்போது காரணம் சொல்பவர் அப்போதே தனது சுயநலத்துக்காக சட்டத்தைத் திருத்தியிருக்கத் தேவையில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த மூன்றாவது முறையும் ஜனாதிபதியாவதை அனுமதிக்கும் 18ம் சட்டத்திருத்தத்துக்கு அப்போதைய அமைச்சரவையில் இருந்த முஸ்லிம் கட்சிகளும் வாக்களித்திருந்தமையும் பின்னர் 2015 பொதுத் தேர்தலில் மஹிந்தவின் சர்வாதிகாரம் குறித்து ‘பிரச்சாரம்’ செய்தமையும் நினைவூட்டத்தக்கது.


Comments
Post a Comment