சிங்கள இனத்தை அரசாங்கம் எப்போதும் பாதுகாக்கும்!

உத்தேச அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குரிய இடத்தை வழங்குவதில் எந்தவொரு வெளி அழுத்தங்களும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எழுப்பப்பட்டு வரும் கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள இனத்தையும், பௌத்த மதத்தையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் என்றும் பின்னிற்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments