விரைவில் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம்: முசம்மில்

இந்த அரசின் வீழ்ச்சி விரைவில் ஆரம்பமாகும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் விமல்வீரவன்சவின் பேச்சாளர் முசம்மில்.

நடைமுறை அரசு ஊடகங்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆளில்லா விமானங்களையும் கண்டு அஞ்சிக்கொண்டிருக்கிறது. 2004ல் ஆட்சி வீழ்வதற்கு முன்பும் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறே அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது அண்மைய நடவடிக்கைகள் மூலம் அதே இடத்திற்கு அவர் தள்ளப்பட்டிருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது, எனவே அரசின் வீழ்ச்சி விரைவில் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments