அடுத்தது என்னைத்தான் கைது செய்வார்கள்: கம்மன்பில
எந்தவித ஆவண ஆதாரமுமின்றி தனது நண்பர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து தான் கைது செய்யப்படலாம் என ஊகம் வெளியிட்டுள்ளார் உதய கம்மன்பில.
இம்மாத இறுதியில் வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ள நிலையில், விமல் வீரவன்சவின் கைதுக்கு ஆதாரமாக எதுவித ஆவணங்களும் இல்லையெனவும் தெரிவித்துள்ள அவர், தன்னைக் கைது செய்ய அம்பலங்கொட பொலிசார் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவும் அன்றைய தினம் தனது கைது தொடர்பில் முன் கூட்டியே தகவல் வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

Comments
Post a Comment