மூதூர்: ஆலிம் ஜின்னா நகர் முஸ்லீம் மையவடிக்கு மின்னிணைப்பு
(ihzana fareed)
மூதூர் ஆலிம் ஜின்னா நகர் முஸ்லீம் மையவடிக்கு புதிய மின்னிணைப்புக்கான பண தொகையும் பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரால் 05.01.2017 வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வை மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நுஸ்ரி ஏற்பாடு செய்திருந்தார். மீனவ சங்க உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகம், ஜனாஸா நலன்புரி சங்கம், விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர்.




Comments
Post a Comment