இஸ்லாத்தில் பெண்ணுரிமையும் முஸ்லீம்களின் மனப்பான்மையும்
(முஹமத் எஸ்.ஆர். நிஸ்த்தார்)
ஆண்களுக்கு சமனான எல்லா உரிமைகளையும் அனுபவிக்கும் உரிமை பெண்களுக்கு இருக்கும் போதும் வரலாற்றுக் காலம் தொடக்கம் இது மீறப்பட்டே வந்துள்ளது. காலத்துக்கு காலம் பெண்களுக்கே உரித்தான உரிமை அனுபவிப்புக்கு சார்பான குரல் மேலோங்கினாலும் நடை முறையில் அவை வெற்றுக் குரல்களாகவே அடங்கிப்போயின.
அதன் பிரதிபலிப்புதான் 1960களில் அமெரிக்கவில் ஏற்பட்ட பெண் நிலை வாதக்(feminism) கருத்தாக்கங்கள். இதன் பயனாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பெண்களின் முக்கியமான பல உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதான ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளதை தவிர இன்னும் பரிபூரண சுதந்திரத்தை பெண் அனுபவிக்கவில்லை என்பது துர்ப்பாக்கியம். பெண் தன் உரிமைக்காக தொடர்ச்சியா குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதும் அவர்கள் ஆண் வர்கத்திற்கு சில செய்திகளையும் சொல்லவேண்டிய தேவையும் இருக்கின்றது, அதாவது பெண் உரிமைக்கான கோரிக்கை என்பது ஆண்களை அடக்கியாள போடப்படும் அத்திவாரமில்லை என்பதும், பெண்களை பலவீனமான சமூகமாகக் கருதி பிச்சை போட எத்தனிக்க வேண்டாம் என்ற அம்சமுமாகும். அதாவது மனித பிறவியின் சமமான அடுத்த பக்கமே பெண்கள் என்பதை ஆண்கள் உணரவேண்டும் என்பதே இந்த செய்தியின் வியாக்கியானம்.
சூரியன் மறையாத ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட பிரித்தானியாவிலேயே சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்கள் சொந்தமாக சொத்து வைத்திருக்கும் உரிமை வழங்கப்பட்டது. அதே கால அளவில் இருந்துதான் அவள் தன் ஆண் துணையை விவாகரத்து செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. இந்த நிலைகளைகளை கருத்தில் கொண்டே பிரித்தானிய சட்டங்களுக்கு அல்லது ரோமன், டச் சட்டங்களுக்கு அல்லது அதற்கு மூத்த கிறேக்க சட்ட ஏற்பாடுகளுக்கும் முன்பாகவே இந்த உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிவிட்டதாக உரத்துச்சொல்ல ஆசைப்படும் நாம் இன்றை முனேற்றகரமான உலக நாடுகளின் சடங்களிலும் பார்க்க மிகவும் பிற்போக்கான விடயங்களை சட்டம் என்ற பெயரால் அரங்கேற்றி வருவது பற்றி கவலை கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அத்தகைய பிற்போக்கான விடயங்களில் ஒன்றுதான் முஸ்லீம் பெண்கள் “அரசியல்” செய்யக்கூடாது என்ற வாதம் என்பது எனது நிலைப்பாடு.
வரலாற்று காலம் தொடக்கம் பெண் இரண்டாந்தர மனித பிறவியாக அல்லது அதைவிட மோசமாக ஒரு “பண்டம்”(chattel) என்ற நிலையிலேயே நோக்கப்பட்டாலும் காலத்துக்கு காலம் ஏற்பட்ட புத்தாக்க கருத்துகள் மூலமாக பெண்களின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியாது. அந்த வரிசையில் பாலைவனப் பெண் சிசுவின் உயிர்வாழ்வதற்கான அடிப்படி உரிமை இஸ்லாத்தின் வருகையினால் நிலை நிறுத்தப்பட்டதுமல்லாமல் பெண் வெறும் பண்டம் என்ற நிலையை மாற்றி பெண்ணுக்கே உரித்தான உரிமைகளுடன் கெளரவத்துடன் வாழ்வதற்கான உத்தரவாதமும் வழங்கப்பட்டது. இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஒன்றுதான் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அவர்களின் சொந்த விருப்பின் பெயரில், அந்த உடன்படிக்கை சரத்துக்கள் மீறப்படும் போது சம்பந்தப்பட்டோர் சட்ட விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்ற நிலையில், செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் என்பதாகும். இந்த உரிமைகளின் இன்னுமொரு விடயம் தான் சமூக சீரமைப்பில் பெண்களின் பங்களிப்புக்கான உரிமை என்ற விடயம்.
இறைவனின் பிரதிநிதியாக மனிதன் படைக்கப்பட்டதாக புனித குர்-ஆன் கூறும் போதும் ஆண் மனிதன் பெண் மனிதனை தனக்கு கீழாக வைத்திருக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் காலங் காலமாக செய்து வருவதும், ஆண் தன் இயலாமையை மூடி முறைக்க ஆண் மனோபாவத்தில் வாசிக்கப்படும் மதக் கோட்படுகளுக்கு பின்னால் ஒழிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளும் இன்றைய நூற்றாண்டில் வெகுவாக கேள்விக்குட்படுத்தப்படுவது சற்று ஆறுதல் தருகின்றது.
கல்வி தேடும் உரிமையை இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வித கடமையாக காட்டிய பொழுதிலும் பன்நெடுங்காலமாக “எழுத-வாசிக்க” தெரிந்திருத்தலே பெண் கல்வியின் உச்சவரம்பாக ஆண்களினால் நிர்ணயிக்கப்பட்டு பெண்களின் பல தலைமுறையினர் வஞ்சிக்கப்பட்டனர் என்பதோடு- எழுதல், வாசித்தல் என்ற நிர்ணயம் கூட தெளிவில்லாத இன்னும் ஒரு பிரச்சினையாக இருந்ததையும் நாம் மறக்கமுடியாதுள்ளது- இந்த நிர்ணயத்தின் பயனாக புனித நூல்களின் வாசிப்பும், பொருள் கொள்ளலும்(interpretation) , புதின நூல்களினுடான தேடல் அனுமதியும் ஆணுக்கான பிரத்தியேக உரிமையாக காட்டவும் எழுவாகியது. இந்த அநீதிக்கு எதிரான குரல் பெண்களிடத்தில் இருந்து வெளிவரவில்லை என்பதும், புலமைத்துவம் பெற்ற(intellectuals) ஆண்களின் காரணமற்ற அமைதியும், பெண் உரிமை மறுப்பாளருக்கு சாதகமாக அமைந்ததை மறுக்கமுடியாது என்பதோடு புனித ஏடுகளின்(குர்-ஆன், ஹதீஸ்) காலத்தின் தேவையுடன் கூடிய மீள்வாசிப்பு இறைவனால் தடைசெய்யப்பட்ட( ஹராம்) ஒன்றாகவும் சமூகத்துக்குள் பரவவிட ஏதுவாக அமைந்தது. இதுவே உலகளாவிய “இஸ்லாமிய உம்மத்தின்” (Islamic society) இன்றைய பரிதாப நிலைக்கும் காரணமாகின என்றால் அது மிகையாகாது என்பதும் எனது இன்னுமொரு நிலைப்பாடு.
இதன் அசைக்கமுடியாத அடையாளங்கள்தான் இலங்கையின் நல்லாந்தளுவ பகுதியில் பகிரங்க மட்டை அடிக்கு ஆளாக்கப்ப்பட்ட பெண்கள், ஆப்கானிஸ்தான் கந்தகாரிலே மூக்கு முற்றாக அறுக்கப்பட்ட பெண், பாலியல் வன்முறை குற்றச்சாட்டை மேற்கொண்ட இளம் பெண்ணே கட்டை பஞ்சாயத்தின் தீர்ப்பினால் கூட்டு கட்பழிப்புக்கு முகம் கொடுத்த இந்திய பெண், முஸ்லீமாக இருந்தும் கூட மாற்று கோத்திர ஆணை தன் சுய விருப்பில் மணமுடித்த பெண்னை குடும்ப கெளரவம் பாதிக்கப்பட்டதாக குடும்பமே சேர்ந்து கொலை செய்து அதற்கு “கெளரவ கொலை” (honour killing) என்று பெயரிட்டு சட்டத்திற்கு தாத்தா காட்டிய பகிஸ்தானிய சமூகம், முஸ்லீம்களின் நடத்தையை காட்டி இஸ்லாத்தை விமர்சித்துவிட்டாள் என்ற காரணத்துக்காய் “தலை கொய்தல்” தீர்பில் வங்காள தேசத்தில் இருந்து தன் உயிரை காப்பாற்ற ஸ்வீடனில் சரணடைந்துள்ள தஸ்லீமா நஸ்ரின் (இந்த பெண் பிரச்சினைக்குறியவர் என்பது இன்னுமொரு விடயம்), பெண்ணின் இயல்பான பாலியல் இன்பத்தை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் ஆண்களின் அடக்க முடியாத ஆனந்தத்தை ஆதிகரிக்க பெண்ணின் பிறப்புறுப்பை “வெட்டி ஒட்டி-தைத்து சிறுக்க வைத்தல்”( (genital mutilation) என்ற போர்வையில் அனேகமாக முழு ஆபிரிக்க கண்டத்திலும் நடந்தேறும் மனித விரோத செயல் என்று முற்றுப் பெறாத பட்டியல் இருக்கின்றது.
இங்கு நோக்கப்பட வேண்டியது பாதிக்கப்பட்டவர் அனைவரும் பெண்கள். அவர்களை துரத்துபவர்கள் ஆண்கள். அதேபோல் இங்கே வேறு ஒரு நாடகமும் அரங்கேறுவதையும் காணலாம், அதாவது மேற் சொன்ன குற்றங்களாக காட்டப்படுபவை ஆண்களால் செய்யப்படும் போது அங்கே அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று காட்டும் அளவுக்கு மெளனம். நல்லாந்தளுவையில் ஆண்களால் செய்யப்படும் குற்றங்கள், விபச்சாரம், அனாதைகளின் சொத்துக்களை சூரையாடல், பள்ளி சொத்துக்கள் துஸ்பிரயோகம், களவு என்று எல்லாமே ஆண்களால் நிறை வேற்றப்படும் போது இந்த கட்டை பஞ்சாயத்துகளை காணமுடியாதுள்ளது. அபின் வியாபாரத்தில் கிடைக்கு பணம் மூக்கறுக்கும் கலாச்சார காவலர்களுக்கு வழங்கப்படுவது பற்றி கட்டை பஞ்சாயத்துக்கள் வாய் திறப்பதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக கூட்டு கற்பழிப்பை ஆணையிடும் கட்டை பஞ்சாயத்து அந்த பெண்ணுக்கு இரட்டை அநீதி நிகழ்த்தப்படுவதை பற்றி கவலைப்படுவதில்லை.
“நாரே தக்பீர்” என்று தெருவுக்கும் தெரு கூக்கரலிடும் உறுது மொழி பேசுவோர் சொந்தப்பிள்ளையை கொன்ற கொலைகாரக் குடும்பம் என்று அந்த “கெளரவ கொலையாளி” களை அடையாளப்படுத்துவதில்லை. முஸ்லீம் என்ற அடையாளம் தாங்கி தனிநபர்களினால் பாதிக்கப்பட்ட பெண் இஸ்லாத்தையும் , முஸ்லீம் என்ற அடையாளம் தாங்கிகளையும் பிரித்தறிய முடியாதாளவுக்கு பலவீனமாக இருந்த போதும் அவள் இஸ்லாத்தை விமர்சித்துவிட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக கொலை தீர்பளித்துள்ள கட்டை பஞ்சாயத்து நான் முஸ்லீமாக இருந்து கிறிஸ்தஸ்வனாக மாறிவிட்டேன் என்று கூறுவதோடு மாத்திரமல்ல தன் வாதத் திறமையால் இஸ்லாம் பிழை கிறிஸ்தவமே சரி என்று பகிரங்கமாக வாதங்களில் ஈடுபட்டு முஸ்லீம்களை விவாதத்திற்கு அழைக்கும் இளம் தத்துவத் துறை மாணவன் நபீல் குறைஷியை(Nabeel Qureshi) இந்த உறுது மொழிக்காரர்கள் கண்டுகொள்வதில்லை அல்லது ஹமாஸ் இயக்க தலைவரின் மகன், மொஸாப் ஹசன் யூசுப், கிறிஸ்தவராக மதம் மாறியது மாத்திரமால்லாமல் அல்லாஹுவை ஒரு “முதல் பயங்கரவாதி” யாக வெளிப்படையாக சாடும் போதும் அவனின் நிலைப்பாட்டுக்கு எதிராக இந்த கட்டைப் பஞ்சாயத்துக்கள் எதுவும் பத்துவா கொடுப்பதுமில்லை.
ஆக இந்த கட்டை பஞ்சாயத்து நீதிபதிகளுக்கும், இஸ்லாமிய கலாச்சார காவலர்களுக்கும் கிடைக்கும் இலகு இலக்கு(easy target) பெண்களே. ஆகவேதான் அங்கொன்று இங்கொன்றாக எழும் பெண்ணுரிமைக்கான பெண்களின் குரல் அல்லது அதன் நியாப்பாட்டுக்கான ஆண்களின் குரல் “மேற்கத்திய சிந்தனை” யாக, ஆகவே அது இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிரான ஒரு சவாலாக சித்தரிக்கப்படுகிறது. இந்த ஆண்னாதிக்க மனப்பான்மையை கட்டுடைப்பதென்பது இஸ்லாமிய சமூகத்துக்குள்ளேயே நடைபெறப் போகும் ஒருவித ” உட்போர்” எனலாம்.
இந்த அடிப்படையிலேயே இலங்கையின் புத்தளம் நகரத்தில் கடந்த 2016 டிசம்பர் மாதத்தில் தனி நபரொருவர் தன் முகநூல் வழியாக நடத்திய கருத்துக் கணிப்பொன்றையும் பார்க்க வேண்டியுள்ளது. அதாவது இந்த ஆண்டின் முதல் கால் பகுதியில் நடக்க சாத்தியமான நாடுதழுவிய ஊராட்சி மன்ற(local government) தேர்தலில் புத்தளம் முஸ்லிம் பெண்களையும் களம் இறக்குவதற்கு ஒரு பிரிவினர் விருப்புக் கொண்டு அது தொடர்பாக பெண்களின் நிலைப்பாட்டை கண்டறியும் முயற்சி சிறு அளவில் நடக்கும் போது அதை முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியாகவே இந்த முகநூல் கருத்துக் கணிப்பு அமைந்தாக தெரிகின்றது. இதை நடத்திய தனி நபர் மக்களின் “கருத்தறியும்” முயற்சியாக இதை நடத்தாமல் தன் கருத்தை திணிப்பதற்காகவும், தன் நிலைப்பாட்டுக்கு ஆட்சேர்க்கும் ஒரு மார்க்கமாகவுமே இதை நடத்தியதை காணக் கூடியதாக இருந்தது. இதில் கலந்துகொண்டோர் சுமார் 100 க்கும் குறைந்தோரே என்ற பொழுதிலும்( அதிகமானோர் வெறும் பார்பையாளர்களாகவும் இருந்தனர்) அதன் பெறுபேறு 98% ஆணாதிக்க சிந்தனையை உறுதி படுத்துவதாகவே காணப்பட்டது.
இதற்கான காரணம் பெண்கள் பற்றி நம் புனித நூல்கள் கூறுவதாக “உலமா” க்கள் என்று அறிமுகமாகியோர் அல்லது ஆலீம்கள் என்போரால் ஏலவே நம்மிடம் திணிக்கப்பட்ட விடயங்கள் என்பது கண்கூடு. அதாவது பெண் என்பவள் விரைவாக நடக்கக்கூடாது, ஓடக் கூடாது, சத்தமாக சிரிக்கக் கூடாது, சகல பாதுகாப்புகளும் இருந்தாலும் ஆகக் குறைந்தது ஒரு ஆண் குழந்தையாவது இடுப்பில் மஹரமாக வைத்துக் கொண்டு( மாதம்பையில் முஸ்லீம் பெண்கள் அரங்கேற்றிய தவ்ஹீத் அணியினருக்கு எதிரான போராட்டத்ததில் கானணலாம்) அவள் ஒரு தொழிலதிபராக முடியாது, படுக்கை அறையிலும் அவளின் விருப்பு -வெறுப்பு, முடியும்- முடியாமை கணக்கில் எடுக்கப்படமாட்டாது, குடும்ப வாழ்விலும் அதனோடு தொடர்புபட்ட விடயங்களிலும் அவளின் அபிப்பிராயம் கேட்கப்படமாட்டாது. வேண்டுமானால் அவள் ஆசிரியையாக கடமையாற்றலாம் (இது “எழுத-வாசிக்க” தெரிந்தால் போதும் என்ற முட்டாள்தனத்தில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றம் என்ற வகையில் சந்தோசப்படலாம்) ஆனால் அதே பாடசாலையிலும் அதிபராக முடியாது (செளதியில் பெண்கள் வாகனத்தின் முன் ஆசனத்தில் கவணுக்கு பக்கத்தில் இருந்து பிரயாணிக்கலாம், ஆனால் அவள் இடம் மாறி இருந்து வாகனத்தை ஓட்ட முடியாது என்ற சட்டம் போன்றது) ஆக ஆணுக்கு எல்லாம் தெரியும், பெண்ணுக்கு எதுவுமே தெரியாது ஆணுக்கு எல்லாம் முடியும் பெண்னுக்கு எதுவுமே இயலாது என்ற நிலைப்பாடாகும். இந்த அளவீட்டில் இருந்து வெளிவரும் அடுத்த அம்சம்தான் “கல்லானாலும் கணவன்”, “புல்லானாலும் புருஷன்” என்பதை ஒத்த மனப்பான்மை பலவந்தமாக வளர்க்கப்பட்டு, அந்த கல்லும், புல்லும் இறக்கும் போது இந்த பெண் 70 வயதை தாண்டினாலும் அந்த மூத்த பெண்மனி ” இத்தா” இருக்க கட்டாயப் படுத்தப்படுகின்றாள். “இத்தா” என்பது பெண்ணின் மறுமண நோக்கத்தின் சட்ட சிக்கல் தவிர்ப்பு நடவடிக்கை என்பதைத் தவிர அதில் வேறு ஒன்றுமே இல்லை என்று புனித குர்-ஆன் திட்டவட்டமாக சொல்லிய போதும், அந்த இயற்கை நியாயம் மறைக்கப்பட்டு இந்த கல்லின், புல்லின் இழப்புக்கான “கவலை கொள்ளல்” நடவடிக்கையாகவே இந்த “இத்தா” பலவந்தமாக திணிக்கப்படுவதில் இருந்து இந்த ஆணாதிக்க மனப்பான்மையூடான புனித நூல் வியாக்கியானம் எவ்வளவு வஞ்சகத்தனமானது என்பதை கண்டு கொள்ளலாம். இந்த “கவலை கொள்ளல்” ஆண்களுக்கு இல்லை என்பதால் மனைவி மறைந்த அடுத்த கிழமையே தன்னைவிட பாதி வயது குறைந்த பெண்களை மனமுடிக்க தயாராவதைக் கண்டு கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. மிகப் பெரிய வயது வித்தியாசம் பற்றி கேட்டால், இது இறுதி தூதரின் வழி காட்டு என்ற உடனடி பதில். இறுதி தூதர் முதலில் காட்டிய முன்மாதிரி தன்னைவிட 15 வயது மூத்த பெண்மணியை மணந்ததல்லவா என்று கேட்டால் அதற்கு யாரிடமும் பதில் இல்லை. இது ஒருவித நவீன அடிமை முறை தவிர வேறிலை என்பது எனது மற்றுமொரு அவதானிப்பு.
இறுதி தூதரின் வாழ் நாளில் அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா அவர்கள் யுத்தத்தில் பங்கெடுத்துள்ளார்கள் என்றால் அது துல்லியமாக காட்டும் படிப்பினை பெண்னால் முடிந்த அத்தனையும் செய்யும் உரிமை அவளுக்கு உண்டு என்பதே. யுத்தகள பங்கெடுப்பு என்பது மனித விவகாரங்களின் சராசரி நடவடிக்கை அல்ல என்பதை யாரும் மறுப்பதற்கில்லை அதில் பெண்களின் பங்கெடுப்பு என்பது இன்னும் உற்று நோக்கப்பட வேண்டியது. ஆகவே அன்னை ஆயிஷா இறுதித் தூதரால் யுத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் பெண்களின் உரிமை வரம்பு எப்படி இந்த முகநூல் சமய வியாபாரிகளால் நிர்ணயிக்கப்பட முடியும்? இறுதி தூதரின் காலத்தின் பின் இதே அன்னை ஆயிஷா எவ்வாறு மார்கக் கலையில் பிரத்தி பெற்றிருந்தார், எவ்வளவு ஆண்கள் அவரிடம் கற்றறிந்துள்ளனர் என்பதெல்லாம் வெறுமெனே ஜும்மா பிரசாரங்களுக்கு மாத்திரம் அல்லது மாற்று மதத்திரனின் கேள்விகளுக்கு முகங்கொடுக்கும் போது பெண்களுக்கு இஸ்லாம் எந்த உரிமையையும் மறுக்கவில்லை என்று வெகுளித்தனமாக விடைகொடுக்க பாவிக்கின்றோம் என்பதை தவிர நடை முறையில் எங்கும் காணக்கிடைக்கவில்லை.
இறுதி தூதரின் காலத்தின் பின்பு கூட இதேபோன்று போராட்ட தலைமை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது வரலாற்றில் பதிவாகியுள்ளன. ரோமர்களுக்கு எதிரான படை நடவடிக்கை ஒன்றுக்கு பாத்திமா அல்- சமர்கந்தி என்ற பெண்மணி, அதாவது புகழ் பெற்ற அறிஞர் முஹம்மத் பின் அஹ்மத் அல் சமர்கந்தி அவர்களின் மகள், தலைமை தாங்கியதும், ஃகவ்லா பிந்த் அல் அஸ்வர் என்ற பிரதித்திப் பெற்ற பெண்மணி மார்க உபன்யாசம் செய்ததும், அவர் சிரியாவின் அலெப்போவில் அரச சபை சட்ட ஆலோசகராக கடைமாற்றிய பெண் மார்க்க அறிஞர் என்றும் வரலாறு சான்றுகள் வைத்திருக்கும் போது சமயத்தின் பெயரால் இன்னும் பெண்களுக்கு சாரதி அந்தஸ்து வழங்க மறுக்கின்றோம். ஆசிரியாராக பணியாற்ற பெண்கள் அனுமதிக்கப்பட்டாலும் அதிபராவது மார்க்கத்துக்கு முரணானது என்று அண்மையில் கேட்ட பயான் ஒன்றும், “இத்தா” இருக்கும் ஒரு கர்ப்பிணி (?) பெண்ணை பார்க்கச் செல்லும் பெண்கள் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும், காரணம் கருவறையில் இருக்கும் பிள்ளை ஆணாக இருந்துவிடால்(?) என்ற சிந்தனை ஆழமிக்க(?) வெள்ளிக் கிழமை குத்துபா பிரச்சாரமும் என்னை இன்னும் சிந்தனையிலேயே சிக்கவைத்துள்ளது. பெண் கருத்தரித்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிட்டதே. அந்த பெண் பிள்ளையை பெற்றேடுத்தவுடன் மறுமனம் செய்யலாமே. அங்கு “இத்தா” அவசியமே இல்லை என்ற இந்த அடிப்படை அறிவில்லாத “உலமா” வின் போதனை யாருக்கு பிரயோசனம். இப்படி எங்கெங்கெல்லாம் பெண்களை குறிவைத்து செயல்பட முடியுமோ அங்கெங்கெல்லாம் ஒரு கையில் குர்-ஆனோடும் மறு கையில் ஹதீஸ் கிரந்தங்களுடனும் படை எடுக்கின்றனர் இந்த ஆண் உறவுகள்.
குர்-ஆனில் நீங்கள் சொல்வது போல் அப்படி எதுவுமே இல்லையே என்று கேட்டால் குர்-ஆனில் நேரடியாக இல்லை, எல்லாம் மறை முகமாகவே சொல்லப்படிருப்பதாக பொய் சொல்கின்றனர். காரணம் குர்-ஆன் “இது நீங்கள் புரிந்து கொள்ளும் முகமாக இலகு படுத்தப்பட்டுள்ளது” என்று சொல்லும் போதும், குர்-ஆன் தனி மனிதனை நோக்கியே “சிந்திக்க தெரிந்த மனிதனே” என்று ஆண்னையும் பெண்னையும் விழிக்கும் போதும் நமக்கு அப்படி சிந்திக்கும் உரிமையும் இல்லை என்றும் அந்த உரிமையெல்லாம் மொத்தமாக குத்தகை எடுத்தாற் போல் நமக்காக சிந்திக்கவும் தயாராகிவிட்டனர் இந்த முகநூல் உலமாக்கள்.
பெண்களுக்கு தேர்தல் ஒன்றில் வாக்களிக்கவே மறுப்பு தெரிவித்த செளதி அரசாங்கம் இப்போது உள்ளூர் ஆட்சி தேர்தலில் வேட்பாளராக நிற்க அனுமதித்துள்ளதை பாராட்டுவதற்கு பதிலாக அது வெளிநாட்டு சதி என்ற குற்றச்சாற்றோடு அந்த உரிமையை மீண்டும் பறித்தெடுக்க சந்தர்ப்பம் பார்த்திருக்கும் ஒரு கூட்டமும் அதே போலவே இலங்கையின் முஸ்லீம் தனியார் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கான சந்தர்ப்பம் சுட்டிக் காட்டப்பட்ட போது அது யாராலோ எதற்காகவோ செய்யப்படும் ஒன்றாக காட்டி போர் தொடுக்க தயாராகும் ஒரு கூட்டமுமாக குர்-ஆனுக்கு புறம்பான சட்டதிட்டங்களோடு இந்த ஆண்கள் செயற்படும் போதுதான் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் சமயம் என்று மிக இலகுவான குற்றச்சாட்டுகளுக்கும் நாம் முகம் கொடுக்கின்றோம்.
ஆக பெண் என்பவள் பல்பக்க ஆளுமை(multitasked) நிறைந்த படைப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவளை எவ்வளவு தூரம் ஓரங்கட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஓரங்கட்ட மிக சுறுசுறுப்பாக நாம் செயல் படுகின்றோம். பெண் வீட்டை நிர்வகிக்க மட்டுமல்ல நாட்டையும் ஆளும் திறமையும் சக்தியும் பெற்றுள்ளால் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும்வரை அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. பெண்கள் விழித்துக் கொண்டார்கள், அவர்களுக்கான உரிமையை அவர்கள் அனுபவிக்க நாம் அனுமதிக்க வேண்டும். அவர்களாக அதை பறித்தெடுக்கும் போது இது கடைசி நாளின் அறிகுறி என்று நம்மை சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
பெண் உரிமை தொடர்பான எனது கடைசி நேரடி அனுபவம் (20.01.2017) லண்டன் பள்ளிவாசல் ஒன்றின் வெளி வாயிலில் பெண்களின் துண்டு பிரசுர விநியோக சம்பவம். அதன் சுருக்கம்; குறிப்பிட்ட அந்த பள்ளிவாசலில் பெண்களின் பிரத்தியேக தொழுகை அறை இஷா, சுபஹு தொழுகைகள் கூட்டாக தொழ முடியாதவாறு மூடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் கேட்டு பெண்கள் அனுப்பிய கடிததிற்கு பள்ளி நிர்வாகம் பதில் சொல்ல மறுக்கின்றது. ஆகவேதான் மதவழி பாட்டு சுதந்திரம் ஊடாக பெண்கள் நீதி மன்றம் செல்லும் முன் நியாயம் வேண்டி நடத்தப்படும் துண்டுப்பிரச்சார போராட்டம். இப்படி எதுவும் காரணமின்றி அடக்கப்படும் போது அது உடைத்தெழுவது தவிர்க்க முடியாது என்ற இயற்கை நியதி நம் ஆண்னாதிக்க சிந்திப்புக்கு விதிவிலக்காகாது என்பதை புரிந்து கொள்ளல் மிக அவசியமாகும்.

Comments
Post a Comment