திருகோணமலையில் கிராம புரங்களின் விளையாட்டுகளுக்கு நல்லாட்சி அரசு உதவ வேண்டும் – லாஹிர்

(ihzana fareed)

நல்லாட்சி அரசாங்கம் கிராம புரங்களில் இருக்கின்ற விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் திறமையை வளப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.

திருகோணமலை நிலாவெளி அல்பத்தாஹ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு சீருடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நிலாவெளியில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:திருகோணமலை மாவட்டத்தில் நல்ல திறமை படைத்த விளையாட்டு வீரர்கள் இலைமரை காயாக மரைந்திருக்கிறார்கள் அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டு தேசிய அணிகளில் உதைபந்து,கிரிக்கெட்,கபடி போன்ற விளையாட்டுகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.

விளையாட்டு கழகங்கள் விளையாட்டு செயற்பாட்டோடு நின்று விடாது கல்வி செயற்பாட்டிலும் அக்கரை காட்ட வேண்டும்,திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பிரதேசம் விளையாட்டு செயற்பாடுகளுக்கு சிறந்த வளம்மிக்க பிரதேசமாக அமைந்திருக்கின்றது.

அல்பத்தாஹ் பாடசாலையானது மிகப்பெரிய பாடசாலையாகும் இப்பாடசாலையின் கல்விக்கு இவ்விளையாட்டு கழக வீரர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியத்துவம் பெருகின்றது,இவ்விளையாட்டுக் கழகம் பல்வேறு வகையிலும் உதவ வேண்டும் என்றார்.

Comments