மு.கா.தேசியப்பட்டியல்: ஹக்கீமே தீர்மானிப்பார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியப் பட்­டியல் விவ­கா­ரத்தில் கட்­சியின் தலை­வரும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமே இறுதித் தீர்­மா­னத்தை மேற்­கொள்வார்.

தற்­போ­தைய தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் கட்­சித்­த­லைவர் கோரும்­போதே தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்வார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீட உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய பட்­டியல் விவ­காரம் குறித்து கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கும் கட்­சியின் செய­லாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையில்  நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போது கட்­சியின் தேசியப் பட்­டியல் பிரச்­சினை தீர்த்­து­வைக்­கப்­படும் என்று அமைச்சர் தெரி­வித்­தா­ரே­யன்றி எப்­போது தீர்த்­து­வைக்­கப்­ப­டு­மென்று கால அவ­காசம் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

எதிர்­வரும் 11ஆம் திகதி கட்­சியின் அர­சியல் உயர்­பீடக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

அக்­கூட்­டத்தில் இது­பற்றி எந்த தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. மறு­தினம் 12ஆம் திகதி கட்­சியின் பேராளர் மாநாடு தெஹி­வ­ளையில் நடை­பெ­ற­வுள்­ளது.

பேராளர் மாநாட்­டிலும் இவ்­வி­வ­காரம் தீர்­மா­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. கட்­சியின் தலைவர் கூறும்­போதே பாரா­ளு­மன்ற உறுப்பினர் சல்மான் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார். அவ்விடத்துக்கு ஒருவரை அவரே சிபார்சும் செய்வார் என்றார்.

Comments