திருமலை முத்துநகர் பாலம்போட்டார் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் நிறைவு பெறவில்லை
திருகோணமலை பட்டணமும் சூழல் பிரதேச நிருவாகத்துக்குட்பட்ட முத்து நகர் பாலம்போட்டார் கிராமத்தின் மீள் குடியேற்றம் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை
.
1972 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்ரீமா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் முன்னால் மூதூர் முதல்வரும் பிரதி அமைச்சகருமான மர்கூம் ஏ .எல்..அப்துல் மஜீத் அவர்களின் முயச்சியினால் உருவாக்கப்பட்டதே முத்துநகர் பாலம்போட்டார் கிராமமாகும் 1985 ,1990 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் முஸ்லீம் மக்கள் இடம்பெயர்ந்தனர் .20 வருட அகதி வாழ்வின் பின்னர் .2002 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திட்டத்தின் கீழ் (யூ .என்.எச்.சி.ஆர் .).ஆர்.டி.டி .எப்.நிறுவனத்தின் நிதியுதவித்திட்டதின் கீழ் கட்டப்பட்ட முற்றுப்பெராத வீடுகள் 184 பேருக்கு கையளிக்கப்பட்டன ..அன்றிலிருந்து எவ்வித அடிப்படை வசதிகளிமின்றி இப்பிரதேச மக்கள் வாழ்ந்து வருகின்றனர் .
இக்கிராமத்தை வந்தடைவதற்கு கண்டி பிரதான வீதியிளிருந்து இரண்டு கிலோமீட்டர் உள்ளே நடந்து செல்லவேண்டும் வீதிகள் குன்டும் குழியுமாக காட்சி தருகின்றன கோடை காலங்களில் .குடிநீர் பிரதான பிரச்சினையாக இருக்கிறது .இரவானால் யானைகளின் தொல்லை .
சமுர்த்தி வழங்கப்படவில்லை தங்களது குடியிருப்புக்க்காணிகளுக்கான உரித்தாவணமும் இதுவரை வழங்கப்படவில்லை இதனால் இம்முறை பெரும் போக வேளாண்மை செய்தும் தமக்குரிய மாணிய அடிப்படையிலான பசளயும் கிடைக்கவில்லை என கயாத்து மொகமது எனும் விவசாயி தெரிவித்தார் வறட்சியியினால் பாதிக்கப்பட்ட பயிர்களை காணமுடிந்தது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இக்கிராமத்தின்
நிலையை அறிந்த சஊதி கொடை வள்ளல் மஜீத் அல் ஓஷான் என்பவர் அழகிய பளிவாசலொன்ரைக்கட்டி அன்பளிப்பு செய்துள்ளார் . ஆங்காங்கே கிராமத்தை சுற்றி துறைமுகத்துக்கு சொந்தமான காணி யாரும் உட்பிரவேசிக்கக்கூடாது என எச்சரிக்கை பலகை போடப்பட்டுள்ளது.
மற்றுமொரு கிராமம் பாலம் போட்டார் கண்டி வீதி பிரதான வீதியில் அமைந்துள்ளது 1985ஆம் ஆண்டுக்குப்பின்னர் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை காரணம் யாரும் உள்ளே நுழையாதபடி யானைவேலி போடப்பட்டுள்ளது .இங்கு ஒரு பள்ளிவாசல் வீதியின் அருகே அமைந்துள்ளது .
சிதைவடைந்த கிணறுகள் கட்டடங்கள் மக்கள் வாழ்ந்ததுக்கான ஆதரமாக காட்சி தருகின்றன . கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரம் இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் பாலம்போட்டார் கிராம மக்களை 230 குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு பிரதான வீதியின் அருகில் அமைக்கப்பட்ட யானை வேலியை ஒருகிலோமீற்றர் பின்னோக்கி நகர்த்துமாறு கோரிக்கை விடுத்தார் .இக்கோரிக்கை நிறைவு பெரும் பட்சத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறுவதற்கு வசத்தியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.





Comments
Post a Comment