(வீடியோ).,வாழைச்சேனை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் தீசன் முஸ்லிம் வர்த்தகர்களால் தாக்கப்பட்டாரா?




(ihzana fareed)
வாழைச்சேனை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவரும், தமிழ் கிராம அபிவிருத்தி சங்க உப தலைவருமான பொன்னம்பலம் தர்மேந்திர தீசன்  என்பவர் வாழைச்சேனை பொது சந்தையில் உள்ள வங்கிக்கு அருகாமையில் இருவரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலை அனுமதிகபட்டுள்ளதாக பெற்றி நாதம் சமூக வலைத்தளத்திலும், இன்னும் சில ஊடகங்களிலும் செய்திகளாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

மேலும் அச்செய்தியில் பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் பங்குபற்றுதலுடன் வாழைச்சேனை  பிரதேச சபை காணி மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பிட பிரச்சனைகள் தொடர்பான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் சாரதிகள் சங்க தலைவர் எனக் கூறப்படும் தர்மேந்திரன் தீசனும் கலந்து கொண்டிருந்ததாகவும், அதன் பின்னரே குறித்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், தீசனை தாக்கியவர்கள் மேற்படி வியாழேந்திரனின் கூட்டத்தில் கலந்துரையாடிய விடயங்களை பேசிக்கொண்டே தீசனை தாக்கியதாகவும் குறித்த செய்தியில் பிரசுரமாயிருந்தது.

இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை தொடர்பு கொண்டு வினவிய பொழுது…  வாழைச்சேனை பிரதேச சபையில் இடம் பெற்ற கூட்டமானது ஆட்டோ சரதிகள் சங்கதிற்க்கான கூட்டம் இல்லை எனவும், பிரதேச சபை காணி விடயம் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாக இடம் பெற்ற கூட்டம் எனவும் தெரிவித்த வியாழேந்திரன் குறித்த தீசன் எனப்படும் நபருக்கும் அமல்ராஜ் என்ற இரண்டு தமிழ் சமூகத்தினை சார்ந்த  ஆட்டோ சாரதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற பிரச்சனை என குறிப்பிட்டார். இதில் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் தீசன் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்திருப்பதானது கண்டிக்க தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசுகின்ற முஸ்லிம் சமூகத்தினதும் தமிழ் சமூகத்தினதும் இன நல்லுரவினை பலப்படுத்தி இணையப்போகின்ற வடகிழக்கில் சகோதரத்துவத்துடன் இரண்டு சகோதர இனங்களும் சுமூகமான முறையில் வாழ வேண்டும் என்ற தூர நோக்கு சிந்தனையுடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றேன்.  அந்த நிலையிலே குறித்த பிரதேசத்தில் தமிழ் சகோதர்களுக்கிடையில் இடம் பெற்ற சண்டையினை முஸ்லிம் வர்த்தகர்கள் தடுத்து நிறுத்தியமையினை முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கியதாக பொய்யான வதந்திகளை பரப்பி தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசலினை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய நினைக்கும் சக்திகளின் சூழ்ச்சி வலைகளில் இருந்து இரண்டு சமூகங்களும் நிதானத்துடன் செயற்பட வேண்டிய கட்டாய நிலையில் வட கிழக்கில் வாழும் தமிழ் பேசுகின்ற இரு சமூகங்களும்  இருக்கின்றது என பாரளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த விடயம் சம்பந்தமாக  குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து சம்பந்தபட்டவர்களை வினவிய பொழுது தமிழ் சமூகத்தினை சார்ந்த அமல்ராஜ் என்பவருக்கும் பொன்னம்பலம் தர்மேந்திர தீசன் என்பவருக்கும் இடையிலான ஆட்டோவில் ஆட்களை ஏற்றுவது சம்பந்தமாக ஏற்பட்ட சண்டை எனவும், அதனை தடுத்து நிறுத்துவதற்காகவே இரு முஸ்லிம் வர்த்தகர்கள் முன்வந்த காரணத்தினை வைத்து தீசன் என்பவரால் உண்மைக்கு புறம்பான விதத்தில் செய்திகளை ஊடகங்கள் மூலமாக பரப்பியுள்ளதுடன்,  இரு சமூகங்களுக்குமிடையிலும் மீண்டும் இன முறுகளினை தோற்றுவித்து அதில் அரசியல் குளிர்காய நினைக்கும் செயல் என தமிழ், முஸ்லிம் சமூகங்களை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த பொன்னம்பலம் தர்மேந்திர தீசன் என்பவர் வருகின்ற பிரதேச சபை தேர்தலில் வேட்பாளராக களமிரங்க உள்ளதினால் இவ்வாறான ஈனத்தனமான, இன முறுகளினை தோற்றுவிக்கும் செயல்களில் ஈடுபட்டு அதில் வாக்குகளை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொள்ளலாம் என அவரினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றபட்டுள்ள செயல் எனவும் தமிழ் சமூகத்தினை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை மேலும் வலுப்படுத்தும் முகமாகவும், இன முறுகளினை தோற்றுவிகும் முகமாகவும் குறித்த நபரினால் அண்மையில் துண்டு பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் பிரதேசத்திலே தீசனை முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கியதாகும் செய்தியானது திரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. ஆகவே ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையினை அறிந்து கொண்டு இரு சமூகங்களை சார்ந்தவர்களும் நிதானத்துடன் செயலாற்றி, தமிழ் பேசும் மக்களாக வாழ்வதே எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற முக்கிய பணியாகும் பிரதேசத்தில் வியாபாரம் செய்யும் வர்த்தகளும், ஆட்டோ சரதிகளும் என வேண்டி நிற்கின்றனர்.

குறித்த விடயம் வைத்து இரு பக்க நியாயங்களை தெளிபடுத்தும் முகமாக பொன்னம்பலம் தர்மேந்திர தீசனை தொலை பேசியின் ஊடாக தொடர்பு கொண்டு வினவிய பொழுது தான் மட்டக்களப்பில் உள்ளதாகவும், நாளை மறுதினமே தன்னால் பதிலளிக்க முடியும் எனவும் தெரிவித்தார். அத்தோடு செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள் இரு பக்க நியாங்களையும், கருத்துகளையும் அறிந்து இன முறுகளினை ஏற்படுத்தாத வகையில் செய்திகளை பிரசுரிக்க வேண்டும் என வேண்டி நிற்கின்ற தமிழ், முஸ்லிம் சகோதரர்களின் கருத்துக்களுடன், இடம் பெற்ற பிரச்சனையினை விபரிக்கும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


Comments