ஓய்வு பெற்ற அரச பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி!


ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சிலர் நேற்று கண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரச பணியாளர்களுக்காக வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் படிப்படியாக குறைவடைந்து வருவதாகவும் அந்த ஆர்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சங்கங்கத்தின் உறுப்பினரான வணக்கத்துக்குறிய அகுனவில கஸ்சப்ப தேரர் இதனை குறிப்பிட்டார்.

அரச பணியாளர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில்,

குறைந்த பட்சம் ஓய்வூதியகாரர்களின் கொடுப்பனவுகளை ஓரளவேனும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments