கனடா: பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம்; அறுவர் பலி!
கனடா, கியுபெக் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் ஞாயிறு இரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஆறு பேர் பலியாகி எண்மர் காயமடைந்த கோர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இது பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள கனேடிய பொலிசார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவுக்குள் நுழைய ஏழு முஸ்லிம் நாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அகதிகள் கனடாவுக்கள் தாராளமாக வரலாம் என கனேடிய பிரதமர் தெரிவித்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை யும் சம்பவத்தின் போது ஐம்பது பேரளவில் பள்ளிவாசலுக்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment