திரு’மலை: வீடு புகுந்து நகை திருடிய நபர் கைது


திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்க நகைகள் ஐந்து பவுனைத் திருடிய நபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (23) மாலையில் கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.             

குறித்த சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு வீடொன்றினுள்  புகுந்து ஐந்து பவுனுடைய தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக குறித்த சந்தேக நபருக்கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.     சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு நாளை(24) மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments