தாஜீதினின் கொலை வழக்கில் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின்  விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Comments