ஓரின சேர்க்கையை சட்டமாக்கி நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டாம்
ஓரினச் சேர்க்கையை சட்டமாக்கி நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. சலுகையை வழங்கிய பின்னரும் ஓரினச் சேர்க்கையை சட்டமாக்க அரசாங்கம் எதற்காக முயற்சிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டில் ஓரினச் சேர்க்கையை சட்டமாக்க வேண்டும் என நிபந்தனை இருப்பதாக பரவலாக தெரிவிக்கப்படுகின்றது.
என்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் இலங்கைக்கு ஜி.எஸ்.பி சலுகையை வழங்குவதற்கு ஆதரவாக கைச்சாத்திட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் யாருடைய தேவைக்காக அமைச்சரவையில் ஓரினச் சேர்க்கையை சட்டமாக்க முயற்சிக்கின்றது.
அதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாங்கம் தெரிவித்திருந்தன. ஆனால் முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததனால் அது தடைப்பட்டது. தற்போது இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஓரினச் சேர்க்கையை சட்டமாக்க திட்டமிடுவதாகவே தோன்றுகின்றது.
அத்துடன் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய வரட்சியான காலநிலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சகல மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
ஆனால் வரட்சியால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்குத் தேவையான சலுகைகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் நாட்டில் இவ்வாறான அழிவுகள் மற்றும் சோதனைகளுக்கு நாட்டில் இடம்பெறக் கூடிய அநியாயங்களும் காரணமாகும்.
அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்தப் போவதாகத் தெரிவித்து மஹிந்த அணி பேரணி ஒன்றை நுகேகொடையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேரணிகள் மூலம் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் மஹிந்த அணியினர் இவ்வாறான பேரணிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கமே காரணமாகும். மஹிந்த கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட திருட்டுப் பணத்தை செலவிட வழி இல்லாமல் இவ்வாறான வேலைகளை செய்து வருகின்றார். ஆனால் அரசாங்கம் மஹிந்தவுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை. அதனால் ராஜபக் ஷ குடும்பத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதே எமது கேள்வியாகும்.
அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு சில அமைச்சர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. அதனால் அமைச்சுக்களில் இடம்பெறக் கூடிய வேலைத்திட்டங்களில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன. அதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி தொடர்ந்து தலையிட்டு இதனைத் தடுக்க வேண்டும். அமைச்சுக்களில் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கை காரணமாக இந்த அரசாங்கம் மாறி வேறு அரசாங்கம் வந்தால் மோசடிகளில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயமாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்படுவார்கள். அதற்கு முன்னர் இவை திருத்தப்பட வேண்டும் என்றார்.

Comments
Post a Comment