இனவாதிகளுக்கு தீனி போடும் நல்லாட்சியும். கீரியும் பாம்புமாக இருக்கும் ஹக்கிம்+றிஸாட் !!

தன் சொத்துக்களை சுகங்களை உடமைகளை ஏன் உயிரை இழந்து தவித்த #முஸ்லிம் மக்களை குறுகிய நேரத்துக்குள் துரத்தியடிக்கப் பட்டு.

அங்குமிங்குமாக தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள அலைந்து. உறக்கத்தை இழந்து,பிள்ளைகளின் கல்வியை இழந்து, நோய்களுக்கும் மருந்து கிடைக்காமல் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்த போது.

#அல்லாஹ்வின் நாட்டம் ஒரு சாதாரன நிலைக்கு நாடு வந்த போது. தனது சொந்த இடங்களுக்கு அவர்கள் செல்லும் போது.

அங்கு இருக்க முடியாமல் அவர்களை கொத்தி கொத்தி விரட்டும் சமூகம் ஒரு பக்கம்.

அதை உரசி விட்டு குளிர் காய்ந்து சந்தோசப்படும் மற்றோர் சமூகம் இன்னோர் பக்கம்.

சரி போனது போகட்டும் இனியாவது நல்லது நடக்கட்டும் என்றிருந்த மக்களுக்கு.   எதிர்பார்ப்போடு முஸ்லிம்களை நம்ப வைத்து ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி கூட  இன்று கழுத்தறிப்பு செய்து கொண்டிருப்பதை நினைக்கும் போது.

தன்விரலால் தனது கண்ணை தானே குத்தியதாகத்தான் நினைக்க தோனுகிறது

பாம்பு கூட தன்னை சீண்டினால்தான் தாக்கும் எதிராளியை.  ஆனால் நல்லாட்சி தேடித்தேடி போய் தீனி போடுகிறது இனவாதிகளுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

எனவே இவைகளுக்கு எதிர் நீச்சல் போட்டு சமூகம் வெற்றி பெறவேண்டும் என்றால். ஆளுக்கொரு மூலையில் இருந்து ஊளை இடுவதை நிறுத்தி விட்டு.

அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் கூட்டாக குரல் எழுப்ப வேண்டும்.  தனது சுயநல அரசியலை தூக்கி குப்பையில் போட்டு விட்டு.

#குறிப்பாக கீரியும் பாம்புமாக இருக்கும் அமைச்சர் #றிஸாட் மற்றும் அமைச்சர் #ஹக்கீம் தனது கட்சிக்காகவும் ஆதரவாளர்களையும் குசிப்படுத்துத்தி நற்சான்றுதல் பெற்று வலம் வருவதையும் நிறுத்தி விட்டு.

தனது சமூகத்தையும் மக்களையும் திட்டமிட்டு துரத்தி வருகின்ற விசமிகளை கட்டுப்படுத்த வேண்டுமென்றால். அவர்களுக்கு எதிராகவும்.

அந்த விசமிகளுக்கு தீனி போட்டு ஊக்கப்படுத்தி"வளர்த்த மாடு மார்பில் பாய்வது போல்" நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கும் இந்த அரசிடம். 

உண்மைகளையும் நியாயபூர்வமான யதார்த்தங்களையும் எடுத்துக் கூறி இதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும்வரை உறுதியுடன் அல்லாஹ்வை முன்னிறுத்தி குரல் கொடுக்க வேண்டும் இறுதிவரை.

அப்படி செய்தால் அந்த ஏழை மக்களின் துஆக்களும் நிச்சயம் உங்களை வந்தடையும்.

"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்"

சமூகம் நின்மதியாகவும் சந்தோசமாகவும் பாதுகாப்புடனும் வாழ்ந்தால்தான். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி மேடை போட்டு மக்களை வசப்படுத்தி உங்கள் கட்சியையும் வளர்த்து சாணக்கியத் தலைவர் என்றும் தேசிய தலைவர் என்றும் அடையாளப் படுத்தி தான் விரும்பியவாறு வயிறு வளர்க்க முடியும்.

இல்லாது இப்படியே நீங்கள் சமூகத்தின் பிரச்சின்சியை கண்டும் கானதுபோல் ஆளுக்கொரு மூலையில் அறிக்கை விட்டுக்கொண்டு. நாலு சுவத்துக்குள் பேசிக்கொண்டு.

பேச வேண்டிய இடத்தில் வாய்மூடி மெளனியாக ஏப்பம் விட்டுக் கொண்டு கீரியும் பாம்பும் போல் சமூகத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருந்தீர்கள் என்றிருந்தால்.

ஏழை மக்களின் ஜனாஸக்களில்தான் உங்கள் போட்டி அரசியலை செய்ய வேண்டி வரும். அப்போது உங்கள் முகவரி கூட தெரியாமல் ஓடுமளவுக்கு மக்கள் துரத்துவார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

தயவு செய்து உங்கள் தனிப்பட்ட கோபங்களை மறந்து சமூகத்துக்காக ஒன்று பட்டு குரல் கொடுங்கள் அதுதான் காலத்தின் தேவையும் கூட.

நீங்கள் ஒன்றுபடுவதனால் ஒன்றும் குறைவடைய போவதில்லை. இந்த பதவியும் பட்டமும் மக்களே கொடுத்தார்கள் அது அந்த மக்களுக்கே பயன்படவில்லை என்றிருந்தால்.

நிச்சயம் அல்லாஹ்விடத்தில் பதில் செல்லியாகவே வேண்டும் தப்பிக்கவே முடியாது அமானிதமாகும்!!

(ஒலுவில் ஜெலில்)

Comments