அபாயத்தில் சிக்கியிருக்கும் ஜனநாயகத்தை காப்பாற்றுவது இந்நாட்டு முஸ்லிம்களின் கடமை


முன்னாள் அமைச்­ச­ர் அஸ்வர்,
இன்று அபா­யத்தில் சிக்­கி­யி­ருக்கும் ஜன­நா­ய­கத்தைக் காப்­பாற்­று­வ­தற்கு இந்­நாட்டு முஸ்­லிம்கள் முன்­வ­ரு­வது தலை­யாய கட­மை­யாகும். இந் நாட்டின் ஜன­நா­ய­கத்தை பாது­காப்­பது முன்­னைய காலத்தை விட இன்று மிகவும் தேவைப்­பா­டாக உள்­ளது.

ஆரம்பம் முதல் மார்க்­கத்தின் அடிப்­ப­டையில், ஜன­நா­யக வழி முறையில்  வாழ்ந்­த­வர்கள் முஸ்­லிம்கள் என்­பதை வர­லாறு தெளி­வாகக் கூறு­கி­றது என முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­பரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்லை நெலும் பொக்­குன மாவத்­தையில் அமைந்­துள்ள முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் காரி­யா­ல­யத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மா நாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,  நாட்டில் ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்கும் மக்கள் நல­வு­ரி­மை­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கு­மாக வேண்டி எதிர்­வரும் 27 ஆம் திகதி நுகே­கொ­டையில் மக்கள் பேர­ணி­யொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இப்­பே­ர­ணியில் முஸ்­லிம்கள் கலந்து கொள்ள வேண்­டு­மென முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி வேண்­டுகோள் விடுக்­கி­றது.

இதே­வேளை, முஸ்­லிம்­களின் முதல் கிப்­லா­வான அல்­அக்­ஸாவின் பூமியில் அமெ­ரிக்கா ஜெரு­சலம் நகரைக் கைப்­பற்றி இஸ்ரேலை தலை­ந­க­ராக்கிக் கொள்ளும் முயற்­சி­களில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­மையை முஸ்லிம் உலகம் பல­மாகக் கண்­டிக்­கி­றது. கடந்த 40 வருட கால­மாக அமெ­ரிக்க சியோ­னி­ச­வா­திகள் இஸ்ரேலை காப்­ப­தற்கு எடுத்து வந்த முயற்­சி­களின் இறுதிக் கட்­ட­மாக இதனை நாம் கருத வேண்­டி­யுள்­ளது.

அல்­அக்­ஸாவைப் பறி­கொ­டுக்க முடி­யாது. எனவே ஜெரு­ச­லத்தை சிதைக்கும் வகையில் அமெ­ரிக்க தூது­வ­ரா­ல­யத்தை அங்கு அமைப்­ப­தற்கு ட்ரம்ப் எடுத்து வரும் முயற்­சியை நாம் உலக முஸ்­லிம்­க­ளுடன் சேர்ந்து கடு­மை­யாக எதிர்க்­கிறோம். ஜெரு­சலம் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான பூமி­யென ஐ.நா.சபை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இலங்கை ஐ.நாவின் உறுப்பு நாடு என்ற வகையில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் இந்தப் பயங்­க­ர­மான முடிவை எதிர்த்து ஐ.நாவில் முறை­யிட எமது அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும் என்றார்.

Comments