மஹிந்தவின் அண்ணன் அரசாங்கத்திற்கு ஆதரவு !

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் முறையற்ற நிதிப்பாவனை தொடர்பில் பல்வேறு விமர்சனம் கடந்த காலத்தில் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காணிகளை சீனாவுக்கு வழங்குவது சம்பந்தமாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான காணி வசதிகளை தேடிக்கொடுக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அந்த பணிக்கு நான் உதவி செய்வேன். ஹம்பாந்தோட்டையில் தொழிற்சாலைகள் உருவாக வேண்டும்.

ஹம்பாந்தோட்டை மேலும் அபிவிருத்தியடைய வேண்டும். அதனை நான் எதிர்க்கவில்லை என சமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

காணிகளை தேடிக்கொள்வதில் பிரச்சினைகள் இல்லை என்றாலும் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை சம்பந்தமாக சிக்கல்கள் உள்ளன.

துறைமுக அதிகார சபைக்குரிய அதிகாரங்களை வேறு தரப்புக்கு வழங்கியது தொடர்பில் பிரச்சினை இருக்கின்றது. அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் குடும்பமே அரசாங்கத்திற்கு எதிராக செயற்ப்பட்டு வரும் வேளையில் இவருடைய கருத்து தற்போது வியப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments