முடியாவிட்டால் மைத்திரி ஏன் பொறுப்பேற்க வேண்டும்?

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவோ அல்லாது புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தவோ முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2020இல் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாதென்றால் ஜனாதிபதி ஏன் அவர் கட்சியை பொறுப்பேற்றார் எனவும் அவர் கேள்விழுப்பியுள்ளார்.

நேற்று காலை கண்டியில் மல்வத்துபீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குறிய திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் விடயங்கள் தொடர்பாக அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய வேண்டுமென்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்மென உயர்நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.

இதன்படி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாது என கூற முடியாது. ஏன் அவர் கட்சியை பொறுப்பேற்றார். அவர் கட்சியின் தலைவராக இருக்கின்றார் என்பதே எமது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments