சம்பிக்க – ரத்ன தேரர் உறவில் விரிசல்: தேரர் தனித்தியங்க முடிவு

இன்ற முதல் தாம் எந்தக் கட்சியும் சாராது தனித்தியங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் அத்துராலியே ரத்ன தேரர்.

அண்மைக்காலமாக சம்பிக்க ரணவக்கவின் செயற்பாடுகளிலிருந்து தூர விலகியே இருந்து வந்த நிலையில் தேரர் இவ்வாறு அறிவித்துள்ளார். மக்களை விழிப்புணர்வடையச் செய்வதிலும் அரசை சரியான வழியில் கொண்டு செல்வதிலும் தனது பங்கை அதிகரிக்கும் முகமாகவே சுயாதீனமாக இயங்க முடிவெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments